நான் டாக்டர் விஸ்வநாத் நகரத் தில் புகழ் பெற்ற சை க்காலா
ஜிஸ்ட்..
இளம் பெண்ணை என்னிடம் அறிமுக படுத்தி”, டாக்டர் இவங்க
திவ்யா வயது 19 . நீட்ஸ் யுவர் டிரிட்மெண்ட்”என்றார் டாக்டர்
நரேன்
“”ஓகே. ஐ வில் டேக் ஹெர். ”
திவ்யாவிடம் 19 வயதுக்குண்டானசெழிப்பு காணப்படவில்லை.
மெலிதான தேகம். முகத்தில் அச்சம்,பதட்டம்
“ஓகே திவ்யா உங்க ப்ராப்ளம் என்ன? ”
ஓரு மாறுபட்ட கோணல் சிரிப்பில் , அவள்சொன்ன வார்த்தை
எனக்கு அதிசயமாகவும்அதிர்ச்சியாகவும் இருந்தது.
“என்அப்பாஅம்மாஇரண்டுபேரும்நான்வளரும்வரை,என்னைஏதோ
கடமைக்கு வளர்த்தாங்க.””என்கிட்ட அன்பா நடக்கல. ‘
“உன் மேல ஆத்திரமும், மன கசப்பும் எதாவது இருந்து
அவங்க அப்படி நடந்து கொண்டார்களா?
“நோ நோ டாக்டர் !”. ஆனா, ஆனா , என் மேல துளி கூட
பாசம் காட்டியது கிடையாது”.
“இந்த உலகில் என்னை போன்று பல பேர் அன்பு தோல்விக்கு
காரணம் நம்பிக்கையுரியவர்கள் முதுகில்குத்துவதே.ஆனால் அந்த
துரோகத்தை வெறுக்கிறேன்”.
“வெல் செட் திவ்யா”!
இந்த பெண்ணின் மனதில், இவ்வளவு ஆழமான
வடுஉள்ளதுஎன்றுதெரிந்த போதும், அதே
சமயம்,இவ்வளவுஅழகாக,பேசியவிதமும்,என்னைகவர்ந்தது.
“பிளிஸ் ப்ரோஸெட்”
“நான் காலேஜ் ஜாயின் பண்ணிய உடனே அவங்க
பிரிஞ்சுட்டாங்க” “இப்ப நீ யாரோட இருக்கே? ”
“நான் ஹாஸ்டல்ல இருக்கேன்.டாக்டர்”
“ஏன் ?மனதை காய படுத்த அங்கே யாரும் இருக்க
மாட்டார்கள்..திவ்யாவின்
பர்சனல்ஹிஸ்டரிகேட்டபிறகு,இரண்டுநாள்கழித்துபிளட்டெஸ்ட்ரிசல்ட்ல
்,
ரததணுக்கள் குறை பாட்டுக்கு, காரணம் திவ்யா உடம்பில் ஊட்ட
சத்து அதோடு. மனதில் , பெரிய பிளவு ஏற்பட்டு இருக்கு,
என்பதை அறிந்துகொண்டேன்.
“”இப்ப உனக்கு லைப்லே என்ன வேணும்.? ”
“அன்பு இல்லாத உலகம். மேலும் அபத்தமா தான் தெரியுது. ”
“ஒன்னை ஒன்னு கேக்கலாமா? ”
“நீ யாரையாவது காதலித்து இருக்கியா? ”
கேவியும், விம்மலுடனும் அழுது கொண்டே, “நான் யாரையும்
லவ் பண்ண முடியாது.. , எனக்கு பயமா இருக்கு. ம்ம்ம்ம்.”
“ஏன் நீ ரொம்ப அழகா தானே இருக்கே.? “பின் ஏன் யாரும்
உன்னை லவ் பண்ணல?”
“உன்னை நேசிப்பவர்கள் யாரவது இருந்தால் நீ அன்பை திருப்பி
காண்பிக்க முடியுமா? ”
“இல்லை ம்ம்ம்ம்ம் எனக்கு பயமா இருக்கு ” மீண்டும் அதே
வார்த்தை.
“இவள் உள் மனதில் உள்ள அழியாத பயத்தை எப்படி போக்கு
வது?” .
என் கைகளை, என் இருதயமருகில் கொண்டு போயி, அந்த
கைகளை எடுத்து, சிம்போலிக்க்கா’ என்அன்பை
காண்பித்து,சைகைமூலம்உணர்த்தி,
ஸீ மை டார்லிங் திவ்யா
“ஐ லவ் யூ” .”நான் உன்னிடம் ஷேர் பண்ண நினைக்கிறேன்.”
நான் செய்த, சைகை யை , பார்த்த திவ்யா என்னை , சந்தேக
கண்ணோட் டத் துடன் பார்த்தாலும்., திரும்ப திரும்ப நான்,
“டேக் இட் திவ்யா ஐ லவ் யூ.”
என்று நான் சொன்ன போது, அவள் என்னை தயக்கம் கொண்டு
பார்த்தாள்.
“கம் ஆன்திவ்யா இட்ஸ் ஏ கிப்ட் டு யூ டேக் இட். ” .
மீண்டும். விசும்பலும் அழுகையும்
சிறிது நேரம் யோசனைக்கு பிறகு,
“டாக்டர் ! இப்போ தான் என்னையும்,லவ்பண்றேன்ன்னு , சொல்ற
ஆளை, முதல் முதலாக பார்க்கிறேன். ”
“ஏன் யாரும் சொன்னது கிடையாதா? ” ம்ம்ம்ம் …தலையை
ஆட்டினாள். “ஒங்க அப்பா அம்மா கூட “ஐ லைவ் மை
டியர்திவ்யான்னு,” ஓரு நாள்
கூடசொன்னதுகிடையாதா?இல்லை!இல்லைஎன்முன்புஅவர்கள்சண்டை
போட்டுகொண்ட நாட்கள், அதிகமே தவிர, ஓரு நாள் கூட
பாசமா கொஞ்சினதுகிடையாது.”என்னை அவர்கள் எப்போதோ
நிராகரித்தது விட்டார்கள்.
“அவர்கள் நிராகரித்து உன்னை தூக்கி எறிந்தாலும் கவலைப்படாதே!!!!
கடவுள் உன்னை தாங்கி பிடிப்பார்.”
“நீ ஒங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பெண் தானே.? ”
“ஆமாம் ”
“ஸ்கூல் படிப்பு முடிக்கற வரைக்கும் எனக்கு காலையில் பிரேக்
பாஸ்ட் , லஞ்சோ கிடைக்காது”
மத்த பசங்க அவங்க அம்மா செஞ்சு கொடு த் தாங்கான்னு வித
விதமான லஞ்சை காமிக்கும் போது எனக்கு ஏக்கமாய் இருக்கும்.”
பள்ளியில் படிக்கும் போது, பல போட்டிகளில் கிடைத்த
பரிசுகளை நான் காண்பித்த போது என்னை பாராட்டி ஒரு
வார்த்தை இரண்டு பேரும் சொன்னது கிடையாது. ”
சின்ன வயதிலுருந்தே சரியான ஊட்ட சத்து உணவுகள்
இல்லாமல் இருந்ததினால் . இம்முனிட்டி குறைவு அத்துடன்
அவள்ஆழ்மனதில்,அவர்கள் நடவடிக்கை ஆழமான ரணத் தை
ஏற்பட்டுத்தியுள்ளது
அவள் சொன்னபடி ஏதோ கடமை க்கு பிறந்து , எந்த விதமான
அன்பையும் கவனிப்பும் பெறமுடியாத துர்பாக்கியசாலி என்பதை
உணர்ந்த நான், அவளிடம் அன்பாக
“திவ்யா யூ வில் பி ஆல் ரைட் சூன். ” எனக்கு அந்தநம்பிக்கை
பிரகாசமா தெரியுது ”
டோன்ட் ஒர்ரி” ஒன்னு செய்யேன்”.
என்ன டாக்டர்?
உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் இங்கே அழைச்சிட்டு வர
முடியுமா? நான் பேசனும்”.
“ம்ம்ம்ம் முடியுமான்னு தெரியல டாக்டர். ”
“ஓகே ஓகே . நீ அட்ரஸ் கொடு.”
அட்ரஸ் வாங்கி கொண்ட பிறகு “ஓகே திவ்யா நீ ஹாஸ்டல்
போய் நிம்மதியா இரு.”இந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடு.
“பி சியர்புல் ஓகே “ஆல் தி பெஸ்ட். “.
இரண்டு நாள் கழித்து,திவ்யாவின் அப்பா சந்திரன் , அம்மா
மலர் கிளினிக் வரவழைக்கப்பட்டார்கள். திவ்யாவின் இப்படி
பட்ட
நிலைமைக்குதாங்கள்தான்காரணம்என்பதை,அவர்கள்உணர்ந்துகொண்ட
தாகவோ,வருத்தப்பட்டதாகவோதெரியலை ”
பர்சனல் ஹிஸ்டரியை கேட்ட போது, சந்திரன் ஓரு கம்பெனி
யில் கிளார்க். மலர் வேறு ஓரு கம்பெனியில் கிளார்க்.. நல்ல
வேலை. போதுமான சம்பளம். அழகான பெண் குழந்தை. பின்னே
என்ன பிரச்சனை.?
திவ்யா வளர , வளர, சந்திரனுக்கு குடி பழக்கம் வளர
ஆரம்பித்து உள்ளது. மலரை போட்டு அடிப்பது. இவன் அடி
தாங்காமல், வெறுத்து மலர் ஆபீஸ்ல, இன்னொரு ஆளுடன்
நெருங்கிய உறவை தேடி கொண்டு உள்ளாள்.
.திவ்யா, அழகு தேவதையிடம் அன்பு பாசம்நேசம் பரிவு
கவனிப்பு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்,
தங்களுக்குள், பிரிந்து வாழ முடிவு செய்து டிவோர்ஸ் ரிசல்ட்
க்கா காத்து இருப்பதும், தெரிய வந்தது.
“ஆமாம் திவ்யாவின் படிப்பு, ஹாஸ்டல் செலவுக்கு பணம்?”
“அவ ரோசக்காரி. எங்க இரண்டு பேர் பணமும் வேண்டாம்ன்னு
போயிட்டா. ” பார்ட்டைம் ஒர்க் பண்ணி , தானே தன் செலவினை
சமாளிச்சு கிறான்னு , அவ பிரண்ட்மூலம்தெரிஞ்சுகிட்டோம். ”
“இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை?”
தாய் அன்பு, அரிச்சுவடி. தந்தை அன்பு ,வழிகாட்டி.
ஒங்களுக்கு தெரியுமா?பெற்றோர் வளர்ப்பு முறை நான்கு
வகைபடும்.
முதலாவது சர்வாதிகார பெற்றோர் ;
இரண்டாவதுஅதிகார பெற்றோர் ;
மூன்றாவது அனுமதி அளிக்கும் பெற்றோர்; :
நான்காவதுசம்பந்த படாத பெற்றோர்;
.
இதில் நீங்கள் கடைசி ரகத்தை சேர்ந்தவர்கள். ஏதோ பெத்து
போட்டோம் அது தானா வளர்ந்துடும் என்கிற விட்டேத்தியான
மனப்பான்மை கொண்டவங்க நீங்க . என்பதை உங்கள்
நடவடிக்கை சொல்கிறது.”
“திவ்யாஅன்பின்றி,தன்னம்பிக்கைஇல்லமால்மனவேறுபாடு,மனநெருக்க
டி, சோகம் பயம், தன்னை பெற்றோர்கள் கவனிக்க வில்லை
என்கிற ஏக்கம். பாசம் காட்டாத உங்க சுய நலம், ” சின்ன
வயதில்நீங்கள்கவனிக்கமால்போன விபரிதம் , , எல்லாம் சேர்ந்து
அவளை சீரியஸ் கண்டிஷன்ல , கொண்டு வந்து இருக்கு
உடல்அளவிலும் , மன அளவிலும் மோசமான நிலைமையில்
இருக்கா! இது உங்களுக்கு தெரியுமா? ”
“”இந்த டீன் ஏஜ் கால கட்டத்தில் இருக்கும் அவள் தறி கெட்டு
திசை மாறி , மதுவுக்கு அடிமையாகி, விபரீத முயற்சிக்கு
போயிருந்தால்?”
“யோசித்தீர்களா?”
திவ்யா மாதிரி இன்று நிறைய இளம்பெண்கள், பெற்றோர் அன்பு பாசம்
கவனிப்பின்றி, தறிகெட்டு ,பாதுகாப்பு இல்லாமல் , சமுதாயத்தில்
வன் கொடுமையினால் கெட்டு போகிறார்கள்.
இன்றைய காலத்தில் “பெண்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறி ?”
“நல்ல வேளை ” திவ்யா , அப்படி பட்ட பொண்ணு இல்லை.
அவள் வில் பவர் இங்கே என்கிட்ட கொண்டு வந்துருக்கு. “.
அன்பு இருக்கிற இடத்தில் ஆரோக்கியமும், செல்வமும் தானவே
வரும் தங்கி இருக்கும் . .
மனதில் அன்பு இருந்தாலே போதும்.எதுவும் சாத்தியமே.கடினமான
இருதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது.’
நீங்க மூன்று பேரும் உங்கள் உறவுகளை சம நிலையில் துளிர்
விட முயற்சி எடுங்க. வெற்றி நிச்சயம். “.
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென நினைத்தால், உங்களை
உண்மையாகநேசிக்கும் திவ்யாவை நேசியுங்கள்.
”
நான் கொடுத்த நீளமான அறிவுரை,கேட்ட கேள்விகள், பேசிய பேச்சு
திவ்யாவின் பெற்றோர் மனதை கரைய வைத்தது இருக்க
வேண்டும்.
கண் கலங்கிக்கொண்டே,டாக்டர் இவ்வளவு நாள், எங்க
அறியாமை, மற்றும் ஈகோ வினால் எங்களை அழித்து கொண்டது
மட்டும் இல்லாமல், திவ்யா வாழ்க்கையிலும் , அன்பு பாசம்
கவனிப்பு முக்கியமா வாழ்க்கையின் அர்த்தம் தெரியாம இருந்து
விட்டோம்'”.
“இனி திவ்யாதான் எங்களுக்கு எல்லாமே பிராமிஸ் டாக்டர் ”
“எங்களை மன்னிச்சுடுங்க டாக்டர்.”
“ஹாய் திவ்யா ! ஒங்க அப்பா அம்மா கிட்ட நடந்த
கவுன்சிலிங்க் சக்ஸஸ் ஆயிடுச்சு.நீ ஒளி தரும் தீபம் பிரகாசம்
அளிக்க கூடியவள். அவர்களுக்கு இனி நீதான் ஆத்மா உயிர்
என்பது புரிஞ்சிக்க இவ்வளவு நாள் ஆகி இருக்கு..”
“டாக்டர் தன் கையை அவள் கன்னம் அருகில் கொண்டு போய்
, செல்லம்மாக , தட்ட, இப்போ சொல்லு, நீ உஷ்ன த்தின்
தன்மையை உணர முடியுதா சொல்லு ”
“ஐ லவ் மை செல்ப்ன்னு சொல்ல முடியுதா? ”
“என்னால் சொல்ல முடியல டாக்டர் ”
“நோ நீ சொல்லி தான் ஆகனும்..”
நான் கொஞ்சம் வேகமா அதட்டிய குரலில் சொன்னேன்.
“ம்ம்ம்ம் எஸ் ஐ பீல் ”
“வேகமா சொல்லு. ”
“ஐ லவ் மை செல்ப்
” “இந்த நிமிசத்துல ஒனக்கு ஒளி புள்ளி வர ஆரம்பித்து , உற்
சாகம் மற்றும் உனக்குள்ள ஓரு பரவச நிலை வர ஆரம்பித்து
விட்டது. ”
என் தெரபி ட்ரீட்மென்ட் சக்சஸ்.
திவ்யா முத்து பற்கள்தெரிய சிரிக்க ஆரம்பித்தாள்.
உன்கிட்ட இருக்கும் இந்த உ ற் சாகம் தீ மாதிரி இந்த ரூம்
முழுவதும் பரவின மாதிரி இருக்கா? ”
“எஸ் டாக்டர். நான் உ ற் சாக பொண்ணுன்னு இந்த ரூம் பூரா
சொல்லுது.” “என் கிட்ட இருந்த அபத்தங்கள் எல்லாம்
காணாமல் போய் விட்டது. நான் இப்ப ஓரு புது மனுஷியா
பீல் பண்றேன். “குட். திவ்ய இப்ப ,நீ உன்னை நம்ப ஆரம்பித்து
விட்டாய்.”ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.”இத பாருங்க ! திவ்யாவை
கூட்டிகிட்டு ஹில்ஸ் ஸ்டேஷன் போங்க. இன்னும் பிரெஷ் ஆக
பீல் பண்ணுவா.”
ஆல் த பெஸ்ட் திவ்யா ”
சந்திரனும் மலரும் நன்றி சொல்லிவிட்டு போனார்கள்
.
நானும் அவளை மறந்து போயிருந்தேன்.
ஆறு மாதம் கழித்து ஒரு நாள்,
“மே ஐ கம் இன் டாக்டர்”.
“ப்ளீஸ். கம் இன் “திவ்யா ஹௌ பியூட்டி யூ நௌ. ” யூ லுக்
வெரி ஸ்மார்ட்.”
“டாக்டர் ! ஒங்க புண்ணியத்துல நான் அப்பா அம்மா பரிவு
அன்புடன், நல்லா இருக்கேன்.
அன்னிக்கு, இத பாரு திவ்யா ,”வாழ்க்கையில் வெற்றி பெற “தகுதி”
வேணும்ன்னு எல்லோரும் சொல்வங்கா. அந்த தகுதி வாரத்தைக்கு
அர்த்தம்
தன்னம்பிக்கை,குறிக்கோள்,திட்டமிடல்.
இந்த மூன்றையும் சரியா செய்தால், தகுதி தானாகவே
கிடைக்கும்ன்னு சொன்னிங்க.”
“நான் ஒங்க அறிவுரை படி நடந்தேன் .இப்போ
ஜெயிச்சுட்டேன்.டாக்டர்”.
திவ்யா கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் .
அன்பு எல்லாவற்றையும் வெல்லும்.என்று சும்மாவா சொன்னார்கள்!!.