சும்மா செல்லுவங்க சாதி கள் இல்லனு , அதலாம் அனுபவம் பட்டவங்ககிட்ட கேட்ட தான் தெரியும் , என்ன தான் பள்ளிக்கூடதுல சாதி இல்லனு செல்லி கொடுத்தாலும் , நாம அப்போ கேட்கிறதோட சரி அதுக்கு அப்றம் யோசிக்கிறமான இல்ல …..
எத்தனை பெர் நாம் கூட பழகுற பசங்ககிட்ட சாதி பாக் காம பழகுறம் செல்லுங்க ……
முன்னுரை
கஷ்டம் இன்றது எல்லாரோட வாழ்க்கையில் வந்து போகும் அதை சமாளிக்கிறது தான் ஒரு மனிதனோட தைரியம் என் வாழ்க்கைல கஷ்டம் மட்டும்தான் பட்டன் நான் சொல்ல மாட்டேன், சந்தோசங்களும் இருக்கு. நான் சந்தித்த சில பல விஷயங்கள் தான் இந்த கதையோட தொடக்க மே…
கெட்டவங்க பத்து பேர் இருக்குற இடத்துல நல்லவங்களும் ரெண்டு பேர் இருக்காங்க… அந்த நல்லவங்களையும் இந்த கதைல சொல்றேன், அந்த கெட்டவங்களையும் இந்த கதைல சொல்றேன். ஒரு ஆளு ஒரு தடவை தான் வாழ்க்கையை வாழ முடியும். இந்த வாழ்க்கையை வாழ்வது ரொம்ப கஷ்டம்.
என்னோட பெயர் சிவானந்தன்
வாழ்க்கைனா எல்லாத்தையும் சந்திக்கனும் , சந்தோஷம் , துக்கம், கஷ்டம், நல்லது, கேட்டது, இன்பம், துன்பம், மகிழ்ச்சி ,காதல், நண்பன், வெற்றி , தோல்வி, புதுசு, பழசு, இது தான் வாழ்க்கையை
நானும் இதை எல்லாம் கடந்து போகும் சாமானியன் தான் , சாமானியன் என்பவன் நாளையை என்னி யோசித்து வாழ்பவன்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் , கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலையை தெடிக்கொண்டு இருக்கிறேன், நிறைய இடங்களில் வேலையை தேடியும் கிடைக்கவில்லை, கிடைக்கற வேலைக்கு போகி கொண்டுருக்கிறேன்….
நம் வாழ்க்கையில காதல் ஒன்னு இருக்கணும். அப்போ தானே வாழ்க்கையும் கொஞ்சம் நன்றாகப் போகும் , காதலனாலே எல்லாரும் தப்பான அர்த்தா புரிஞ்சுபாங்க , ஆனால் அது இல்லைங்க காதல் பிடிச்சவங்களுக்காக, நமக்கு பிடிக்காததையும் அவங்களுக்காக பிடிச்சு பண்றது தான் காதல் …..
என்ன ஒரு பொண்ணு காதலிக்கிறா.
சீ….சீ நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன்
ஐயோ நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்
அவள் பெயர் தேன்மொழி ……
அவள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக்காக அப்போ உதவுவது தேன்மொழி தான் . அன்ணனைக்கு நடப்பதை அவளிடம் தான் பரிமாறிக் கொள்வோன். எதையும் அவளிடம் மறைப்பதில்லை, அவள் தான் எனக்கு அறிவுரைகளை சொல்வாள். தேன்மொழி நான் பள்ளி படிக்கும் போதிலிருந்து தெரியும்…
தேன் மொழியை பார்க்க சொல்கிறேன் , இன்றைக்கு எனக்கு ஒரு இண்டர்வியூ அதனால் அவளிடம் சொல்லிவிட்டு சொல்லலாம் என்று அவளுக்காக காத்துக் கொண்டுருக்கிறேன்….
தேன்மொழியும் வந்துவிட்டார்……..
என்னடா என்ன இன்றைக்கு எங்கே இண்டர்வியூ பக்கத்துல தான் , டவுன் வரைக்கும் போயிட்டு வரணும் , அதான் உன்னை பாத்துட்டு உன் கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.
அடேங்கப்பா ! …….
என்ன பாக்கணும்னு எல்லாம் தோணுச்சா…
அவனின் முகம் வாடியது,
உன்னை பற்றி தான் எனக்கு தெரியுமோ உனக்கு டைம் இருந்த என்னை பார்க்க வந்துவிடுவாயே கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாய் அதனால் தான் என்னை பார்க்க வர முடியவில்லை. என்று எனக்கும் தெரியும் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன், தப்பாக நினைச்சுக்காத…
சரி ஓகே எனக்கு டைம் ஆகிறது நான் சென்று வருகிறேன் .
சரி பார்த்து போய்விட்டு வா……. என்று தேன்மொழி கூறினாள்
பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன், இந்த ரோட்டில் இருந்து அந்த ரோட்டிற்கு கடந்து செல்ல வேண்டும் அதற்காக இரு புறம் எதுவும் வாகனங்கள் வருகிற தா என்று பார்த்துக் கொண்டிருந்தேன் ஆப் பொழுது அழகான ஒரு முகம் என் அருகில் நின்று கொண்டிருந்தது. சற்று அவள் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தேன்மொழி பார்த்தால் என்ன ஆகும் , என்று கூட நினைக்காமல் அவள் அழகை கண்டு மயங்கி பார்த்துக் கொண்டிருந்தேன்.
காதல்…. ஒருவர் மேல் வைப்பது மட்டும் தான் காதல்
அது தேன்மொழி மேல் மட்டும் தான் எனக்கும் தெரியும்.
அழகை ரசிப்பதால் மட்டுமே அழகை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அந்த பெண்ணும் நானும் ஒன்றாக சாலையை கடந்து அந்த பக்கம் சென்றோம்.அந்த பெண்மணியும் பேருந்துகாக காத்துகொண்டிருந்தால் , நானும் காத்துக் கொண்டிருந்தேன் , ஆனால் அந்த பேருந்து நிறுத்தத்தில் யாரும் அருகில் இல்லை, நாங்கள் இருவரும் மட்டும் தான் நின்று கொண்டிருந்தோம்.
ஒரு பேருந்து மட்டும் வருகிறது, ஆனால் அதில் இந்த பெண்மணி சென்று விடுவரே என்று எக்கமாக இருந்தது, இவை அனைத்தும் என் மனதில் ஓடி கொண்டு இருக்கிறது . ஆனால் வந்தது நான் செல்வதற்காக பேருந்து . எனக்கு இண்டர்வியூ அதனால் நான் அந்த பேருந்தில் ஏறி நின்று அவரை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்தார் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை…….
நான் இறங்கும் இடம் வந்து விட்டதா பேருந்தில் இருந்து கீழே இறங்கி விட்டேன் . நான் ஒரு ஜெராக்ஸ் கடையில் என்னுடைய ரெஸ்யூம் பிரிண்ட் எடுத்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது திருப்பிப் பார்க்கும்போது நான் பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்தபோது என் அருகில் நின்றிருந்த பெண் நான் இறங்கும் இடத்தில் திரும்பவும் பார்த்தேன் .
இங்கே வருவதாகவும் இருந்தால் அந்தப் பெண் நான் ஏறும் பேருந்திலேயே ஏறி இருக்கலாமே என்று என் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதனால் அந்தப் பெண்ணிடம் கேட்க சென்றேன்……
ஏங்க நீங்களும் இந்த பஸ்டாண்டுக்கு வர்றதாக இருந்தால் நான் ஏறி வந்த பேருந்திலேயே என் கூடவே வந்திருக்கலாமே என்று கேட்டேன்………
அந்தப் பெண்
என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்
அந்தப் பஸ்டாண்டில் இருந்த அனைவரும் என்னையே பார்த்தன..
என் கன்னத்தில் அறைந்து விட்டு அந்தப் பெண் சற்றென வெகுவேகமாக சென்றாள் நானும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அந்த இடத்திலிருந்து கிளம்பி சென்றேன்…..
சில சமயத்தில் ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருக்கோம் ஆனா அது காலப்போக்கில் தான் நமக்கு உணர்த்தும் அது மாதிரி தான் அந்த பொண்ணு எதுக்காக என்ன அடிச்சதுன்னு எனக்கும் தெரியல….
அந்த யோசனையோடு இன்டர்வியூக்கு போறேன் , கம்பெனிக்கு உள்ள அங்க என்ட்ரன்ஸ்ல ஒரு பொண்ணு இருக்காங்க அவங்க கிட்ட கேட்கிறேன் எனக்கு இண்டர்வியூ வரச் சொல்லி இருந்தாங்க…
உங்க பெயர் சார்…… சிவானந்தன்
ஓகே கேட்டு சொல்றேன்.
சிவனந்தன் உள்ள கூப்பிடுறாங்க….
அங்க ரெண்டு பேர் உள்ள இருக்காங்க. இவங்க தான் என்னை இண்டர்வியூ பண்றவங்க , நான் எதுவும் மனப்பாடமோ , ரீக்காலோ பண்ணிட்டு வரல எனக்கு தோன்றத இந்த இன்டர்வியூல சொல்ல போறேன் பஸ்டு இண்டர்வியூ….
உங்க பேர் என்ன…
சிவனந்தன் சார்…
எங்க இருந்து வரீங்க….
சோலைவனம் கிராமம்….
என்ன படிச்சு இருக்கீங்க….
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்….
இது பஞ்சு மில் தான் இங்க நீங்க சூப்பர்வைசரா வேலை பார்க்கிற மாதிரி இருக்கும் .அப்புறம் சென்ட்ரல் ஷிப்ட் தான் ,இவ்வளவு டெய்லி டைம் ஓவர் பண்ற மாதிரி இருக்கும் .அதுக்கு ஏத்த மாதிரி நீங்க பிளான் பண்ணி ஆப்ரேட்டர் இருக்கு கொடுத்துரனும் ,அப்புறம் உங்க வேலை கரெக்ட்டா பாக்குறாங்களா அவங்களுக்கு ஏதாவது வேணுமா எல்லாத்தையும் அரேஞ்ச்மென்ட் பண்ணி கொடுக்கணும், இதுதான் உங்க வேலை ஓகேங்களா? மாதம் 5000 உங்களோட சம்பளம்..
ஓகே சார்..
அப்புறம் டிடிஎல் எல்லாம் குடுங்க, என்னைக்கு ஜாயின் பண்ணி இருக்கீங்க,
நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன் சார்
அதுல ஒரு ஆள் என்னோட பைல்ல திருப்பி பார்க்கிறார்
அப்புறம் அவங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிட்டாங்க….
கொஞ்சம் வெளிய வெயிட் பெண்ணுக்கு கூப்பிடுறோம்..
நான் வெளில வெயிட் பண்ணிட்டு இருந்தா இப்ப கூப்பிட்டாங்க
சொல்லுக்காக சார்
இங்க ஆப்ரேட்டிங் வேலை தான் இருக்கு மாதம் 3000 ரூபாய் சம்பளம் 3 ஷிப்ட் பார்க்கிற மாதிரி இருக்கும் உங்களுக்கு ஓகேவா
என்னாச்சு சார்
இப்போதைக்கு ஆப்ரேட்டிங் வேலை தான் இருக்கு
சார் நான் படிச்சது இன்ஜினியரிங் சார் திரும்பவும் என்ன அதே வேலைக்கு பண்ண சொல்றீங்க சார்….
ஓகே பணம் இருந்தா ஜாயின் பண்ணிக்கோங்க…
ஓகே தேங்க்ஸ் சார் நான் கிளம்புறேன்…
என்னன்னு உங்களுக்கு புரியல இல்ல
எனக்கு புரிஞ்சிடுச்சு…
என்னோட டீடைல் கேட்டாங்க உங்களுக்கு ஞாபகம் இருக்கா
அந்த டீடெயிலில் என்னோட கம்யூனிட்டி சர்டிபிகேட் இருக்கு. அதுதான் இந்த மாற்றம் அத பாத்துட்டு ஒரு டிஸ்கஸ் பண்ணாங்க அந்த டிஸ்கஸ் ல தான் என்ன கீழே இறங்கிட்டாங்க……
அந்த நேரத்துல மழையும் வந்துருச்சு
மழையில நனைஞ்சுகிட்டு நடக்கிறேன்…
மழைத்துளியில்
என் கண்ணீர் துளி
கரைந்து ஓடுகிறது……
அந்த பொண்ணு ஏன் அடித்தார்கள் என்று உங்களிடம் சொல்லவில்லை இப்ப சொல்றேன்….
நான் பேருந்தில் ஏறியவுடன் அந்தப் பொன் என்னை பார்த்தால் அல்லவா , அதற்கு அர்த்தம் என்னை தனியாக விட்டு சென்று விடுகிறாயே என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள்..
அது தெரியாமல் நான் அவளை விட்டு போய் விட்டேன், நீங்க நினைக்கலாம்.
அப்போ , அந்தப் பொன்னை காதலிக்கிறாயா என்று உங்களுக்குத் தோன்றும் இல்லை. காதலிக்கும் பெண்ணிற்கு தான் உதவ வேண்டுமா, ஏன் நண்பர்களுக்கு உதவ மாட்டார்களா, தங்கைக்கு உதவ மாட்டார்களா. இது போலத்தான் அந்தப் பெண்ணும்
அதற்கப்புறம் அந்தப் பெண்ணிடம் ஒரு மனநல பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர் ஒரு மாதிரியாக பார்த்து கொண்டிருந்திருக்கிறார்
அதனால் அந்த பெண்மணி பயந்து அடுத்து வந்த ஏதோ பேருந்தில் ஏறி நான் வந்த இறங்கிய இடத்தில் இருந்திருக்கிறாள். அந்த பயத்தில் தான் என்னை அறைந்து விட்டார்….
மறுநாள் நண்பர்களுடன் ஒரு கம்பெனியில் ஒரு மூன்று நாட்களுக்கு வேலைக்கார செல்கிறேன். மதியத்திற்கும் சாப்பாடு எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு செல்கிறேன்..
ஒரு மூன்று நாட்கள் அந்த கம்பெனியில் எலக்ட்ரிஷன் வேலை அதனால் இந்த வேலைக்கு செல்கிறேன்…
முதல் நாள் அங்குள்ள வேலைகளை கொஞ்சம் முடித்து விட்டோம். இன்னும் ரெண்டு நாள் தான் கரெக்டா சொன்னா எங்க வேலை முடிந்துவிடும். அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு தான் தெரியல இன்னொரு கம்பெனில இண்டர்வியூ இருக்கு அங்க போயி பார்த்தால் தான் தெரியும்…
இன்று வெள்ளிக்கிழமை
அந்த கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறேன் அந்த கம்பெனியில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளது இப்போது தான் ஆரம்பிக்கிறார்கள்…
நான் அங்கு மூன்று பெண்மணிகளை பார்த்தேன் ஒன்று என் அம்மா வயது இருக்கும். மற்றவர்கள் இருவருக்கும் என் அக்கா வயதில் கல்யாணம் முடிந்தவர்கள்.. அவர்கள் மூவரும் அங்கு சுத்தம் செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…
ஆனால் மூவரிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
என்னவென்றால்
அந்த அம்மா ஒரு ஹிந்து, அந்த அக்கா இருவரில் ஒருவர் கிறிஸ்டின் மற்றொருவர் முஸ்லீம் ஆனால் மூவரும் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள்…
சில சமயங்களில் இந்த மாதிரி பாக்குறவங்களளா தான் நாம எல்லாரும் ஒற்றுமையாக தான் இருக்கோம் தோணுது ..ஆனா நம்மள மேல இருக்கறவங்கதா நம்ம ஒற்றுமையா பிரிக்கிறங்களேணு தோணுது….
அங்க, எப்பவும் வெள்ளிக்கிழமை அன்று
மாலை பொழுதில் கடவுளுக்கு வழிபடுவார்கள் போல் இருக்கு .
அதற்கா அவர்கள் மதியம் உணவு உண்ட பின் கோவிலை சுத்தம் செய்வார்கள் , அதில் எனக்கு நிறைய ஆச்சரியங்கள் ஏற்பட்டது.
அவர்கள் மூவரும் தான் கோவிலை சுத்தம் செய்கிறார்கள் ,அந்த அம்மா பூஜை சாமான்களை சுத்தம் செய்கிறார். முஸ்லிம் அக்கா பெயர் சாஜா..
கிறிஸ்டின் அக்கா பெயர் ஆஷா .
எப்படி பெயர் தெரியும்னு நினைக்குறேங்காள, அங்க வேலை பாக்குற ஒரு பையன் கிட்ட கேட்டேன் சென்றான். வாழ்க்கையையிலா நல்லது நடக்கும் போது அத பாத்தி தெருச்சுக்காணும் , அப்புறம் நல்லது பண்ணவங்ஙளா பத்தியும் தெரிஞ்சகணும்.. அப்போ பெயர் சொன்னால அவன பாத்தியம் தெரிஞ்சு இருக்கனும்ல உனக்கு, அப்படின்னு நினைப்பீர்கள் சரி தான் , அவன் பெயர் ராம் .
ஆஷா அக்கா பிள்ளையரை தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்கிறார், சாஜா அக்கா இடத்தை பெருக்கி கொண்டு இருக்கிறார். நீங்கள் நினைக்கலாம் அப்பா அங்கே வேலை செய்யவில்லை என்று , என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டே தான் நான் அவர்கள் மூவரும் செய்யும் பணிகளை பார்த்துக் கொண்டுருக்கிறேன்.
அந்த அம்மா அப்பரம் அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறார் , அவர்களும் அருகில் இருந்து கூட உதவுகிறார்கள் , அவர்களுக்கு இந்து கடவுளை எப்படி வழிபடுவார்கள் என்று. தெரியாது அல்லவா, அதனால் தான் அவர் அந்த அம்மா செய்வதை பார்த்து கொண்டு நிற்கிறார்கள் .
அந்த அம்மா கற்புறம் கட்டும் பொழுது அவர்கள் இருவரும் கை கூப்பி வணங்கி போது எனக்கு மெய்சிலுத்தது அன்று . இன் நாட்டில் பெரியவர் , சிறியவர் , ஏழை, பணக்காரன் ,ஆனா அவங்களாம் என்னேட கடவுள் தான் பெரியவர், என்று நினைக்கும் இவ்வுலகில் நாளை பற்றிய யோசனை கள் இல்லாத சாமானியார்கள் தான் இந்த நாட்டில் எல்லாம் சமம். எல்லாம் ஒன்று தான் என்று நினைக்கிறார்கள்.
பூஜைகள் முடித்து விட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள் …..
அன்று என் பணியும் முடிந்தது …….
எனக்கு நாளை இண்டர்வியூ அதனால் நான் நாளைக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டு சென்றேன்….
மறுநாள் இண்டர்வியூ ஆக கிளம்பி சென்று கொண்டிருந்தேன், அப்போது ஒரு குரல் கேட்டது
ஏ நல் நில்! ……என்று
அது வேற யாரும் இல்லை தேன்மொழி
எங்க போ கிட்டு இருக்கேங்க.
எப்பவும் போல தான்
இந்த வேலை உனக்கு கண்டிப்பா கிடைக்கும்….
ஒரு புன்னகையோடு பார்த்தேன்..
அவளும் என்னை பார்த்து புன்னகைத்தல் ….
சரி சென்று வருகிறேன்…..
ம் என்று சொன்னால்…..
11 மணி ஆகிவிட்டது நான் அந்த கம்பெனிக்கு செல்வதற்கு , இன்டர்வியூகு நிறைய நபர் கள் வாந்தனா , அதில் அதிகமான வயது உள்ளவர்களும் வந்தான.
இரண்டு நபர் என் அருகில் வந்து அமர்ந்தார்கள் , நீங்களும் இண்டர்வியூ தான் வந்து இருக்கேர்களா என்று கேட்டேன்.
இல்லைங்க நாங்க நெற்றிக்கு இண்டர்வியூ அட்டன் பண்ணிட்டேம் , இன்றைக்கு வார சொன்னார்கள் அதன் வாந்துருக்கிறோம் …..
சரி ஓகோ ….
பின்னர் 2 மணி ஆகிவிட்டது….
அப்போதுதான் ஒரு பொன்மணி வந்து அனைவருக்கும் ஒரு ஃபார்ம் கொடுத்தார் …
அதில் என்னுடையா அனைத்து முகவரியும் கேட்கப்பட்டது . அதில் என்ன மதம், என்ன சாதி என்று கேட்கப்பட்டிருந்தது ….
என் அருகில் இருந்த நபர் நெத்து நாங்கள் இருவரும் இண்டர்வியூ வந்துருத்தோம் , இன்று வரா செல்லிருந்தேர்கள் என்று சென்றார்கள்
அப்படியா இருங்க நா உள்ளே கேட்டுவிட்டே வந்து செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்….
எனக்கு நம்பிக்கை இல்லை, இந்த இரண்டையும் கேட்கும் இடத்தில் நமக்கு வேலை கிடைக்காது.
அந்த பொன்மணி வந்தால், உங்கள் விட்டிற்கு தபால் அனுப்புவார்கள் அப்போழுது வருங்கள் என்று கூறிவிட்டு, ஃபார்ம் ஃபில் பண்ணி விட்டோர்களா? என்று கேட்டார்
ம் என்று சொன்னார்கள்
அனைவரிடமும் வாங்கி கொண்டு சென்று, ஒரு அறை மணி நேரம் காத்திருக்க சொன்னார்…..
நாங்கள் காத்துக் கொண்டு இருந்தோம் …….
அந்த பொன்மணி வந்து
பெயர் களை வாசித்தது இவர்களை மட்டும் இருக்க சொன்னார்
அதில் என் பெயர் ..
இல்லை, என்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை….
எனக்கு தெரியும் என் பெயரை வாசிக்க மாட்டார்கள் என்று.
என் என்பதற்கு என்னுடைய சாதி ……
எதுவும் கேட்காமல் அங்கு இருந்து கிளம்பி விட்டேன்.
மனிதர்களிள் ஏற்றம் , இறக்கம் ,தாழ்வு எல்லாம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லை எனில் , ஏன் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்…
படித்தால் வாழ்க்கைக்கு உதவும் என்பதற்கு அர்த்தம் இல்லாமலேயே போகி கொண்டு இருக்கிறது. எதுவானாலும் சரி முயற்சி தான் ஒரு மனிதனை மேலே ஏற்றும். தோற்றல் தான் வெற்றி நோக்கி ஓட முடியும், தோற்க்கவே இல்லை என்றால் என்ன செய்வது. வாய்ப்பு கிடைக்காமலா சில மனிதர்களாள் இந்த உலகத்துலா வாழ்ந்து கிட்டு இருக்காங்க.
சாமானியன் வாழ்க்கையே ஒரு பாடம் தான் ….