சிறுத்தை, வீரம், விஸ்வாசம் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவா தற்போது சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் யுவி கிரியேஷன்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றது. இப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கின்றார்.
இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகின்ற 16 தேதி காலை 9.05 மணி வெளியாகும் என்பதை உறுதிப்படுத்த படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.