காட்டு யானைகளின் கூட்டத்தினால் வாகன ஓட்டிகள் அவதி நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப் பாதையில் உட்புற சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தினால் 1 மணிநேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் எல்லாம் தவித்தனர்.ஊட்டி மற்றும் அதனை அடுத்த சுற்றுவட்டார பகுதிகள் எல்லாம் மலைப்பாதை மற்றும் பெரும்பாலும் அடர்வனப்பகுதியை கொண்டதாகவே உள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் எல்லாம் வசித்து வருகின்றன.இதே போல நேற்று மதிய வேளையில் ஒரு காட்டு யானையானது மின் நிலையத்தின் அருகே சாலையில் வந்த கார்களை எல்லாம் வழிமறித்தது. மேலும் கார்களை தாக்குவது போல் அது பின் துரத்தி சென்றதால், காரில் வந்தவர்கள் காரை பின்னோக்கி நகர்த்தி தப்பித்தனர். இதன் பின்னர் சற்று நேரம் சாலையில் உலாவிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடனும் அதேசமயம் யானைகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.