இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் வாக்கில் வெஸ்ட் இண்டீசில் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதியும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 27-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஆகஸ்டு 3-ந் தேதியும் துவங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதியோடு இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணமானது நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் செல்கிறது. அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது. ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்டமும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் எல்லாம் துவங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.