Saturday, August 29, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

சகோதரரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிதியமைச்சர் மரியவில்சன் திரும்பப் பெற்றுள்ளார்.

August 28, 2026

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஸ்குவாஷில் அசத்திய தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார்; Budapest Open சாம்பியன்!

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்!

நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல; நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டுச் சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரியவில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், புதிய குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், ஆக.31-ஆம் தேதிக்குப் பிறகு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாகவும் உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய நிதியமைச்சர் மரியவில்சனின் மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செஸ் உலகில் பிரக்ஞானந்தா புதிய சாதனை; Grand Chess Tour சாம்பியன்!

Next Post

US Open டென்னிஸ் ஆக.30 தொடக்கம்; பரிசுத் தொகையில் புதிய சாதனை!

Next Post

US Open டென்னிஸ் ஆக.30 தொடக்கம்; பரிசுத் தொகையில் புதிய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நேபாள வெள்ளத்தால் எல்லை வர்த்தகம் முடக்கம்; 16 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த சரக்கு லாரிகள்!

August 29, 2026

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி; அடுத்து SCO மாநாட்டில் பங்கேற்பு!

August 29, 2026

ஸ்குவாஷில் அசத்திய தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார்; Budapest Open சாம்பியன்!

August 29, 2026

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடக்கம்!

August 29, 2026

UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு!

August 29, 2026

நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

August 29, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version