கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ள படங்களில் இதுவும் ஒன்று. தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் போது முதலில் தனக்கு பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் தனுஷே தனது பதற்றத்தை போக்கி நம்பிக்கை அளித்ததாகவும் சஞ்சனா கூறியுள்ளார்.
‘எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபா மாதிரி தனுஷ். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் அவர் வல்லவர்.அவருடன் சேர்ந்து நடித்தது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது அதற்கு வாய்ப்பளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல் டேக்காக இருந்தாலும் சரி மூன்றாவது டேக்காக இருந்தாலும் சரி அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையவே குறையாது என சஞ்சனா பாராட்டியுள்ளார்.