மத்தியப் பிரதேசம் பன்னாவில் உள்ள சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளிக்கு வைரக் கற்கள் கிடைத்தது,இதனால் அவர் பல லட்சத்திற்கு சொந்தக்காரராகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் நிறைய சுரங்கங்கள் உள்ளன.இந்த சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறனர்.இவ்வாறு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுருந்த சுபல் என்ற தொழிலாளிக்கு தான் அதிஷ்டம் அடித்திருக்கிறது.சுபலுக்கு 3 வைரக் கற்கள் கிடைத்தது.
சுபல் கையில் கிடைத்த 3 வைரக் கற்கள் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் எடை 7.5 கேரட் என்றும் அதன் மதிப்பு 30 லட்சம் முதல் 35 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரசு விதிமுறைகளின்படி மாவட்ட வைர நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் ஏலம் விட ஏற்பட்டு அதில் கிடைக்கும் பணத்தில் 12 சதவீத வரி பிடித்தம் செய்யப்படும். எஞ்சிய 88 சதவீத தொகை தொழிலாளி சுபலுக்கு அளிக்கப்படும் வைரச் சுரங்க மேலாண் அதிகாரி தெரிவித்தார்.இதன் மூலம் ஓரே நாளில் சுபல் லட்சாதிபதி ஆகியிருக்கிறார்.




