தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.85 லட்சத்தை கடந்துள்ளது என்றும், பலி எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் (அரசு மருத்துவமனையில் 41, தனியார் மருத்துவமனையில் 41) உயிரிழந்ததால், ஒட்டுமொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,88,066 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று 65,189 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,85,024 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மாவட்ட வாரியாக விவரம்,
அரியலூர்-1,205, செங்கல்பட்டு – 17,227, சென்னை – 1,07,109, கோயம்புத்தூர்- 6,227, கடலூர் – 4,445, தருமபுரி – 830, திண்டுக்கல் – 3,465, ஈரோடு – 955, கள்ளக்குறிச்சி – 4,270, காஞ்சிபுரம் – 11,174, கன்னியாகுமரி – 6,015, கரூர் – 706, கிருஷ்ணகிரி – 1,310, மதுரை – 11,797, நாகப்பட்டினம் – 999, நாமக்கல் – 924, நீலகிரி – 931, பெரம்பலூர் – 641, புதுகோட்டை – 2,928, ராமநாதபுரம் – 3,546, ராணிப்பேட்டை – 6,597, சேலம் – 4,420, சிவகங்கை – 2,832, தென்காசி – 2,748, தஞ்சாவூர் – 3,701, தேனி – 7,188, திருப்பத்தூர் – 1,498, திருவள்ளூர் – 16,220, திருவண்ணாமலை – 7,312, திருவாரூர் – 1,919, தூத்துக்குடி – 8,648, திருநெல்வேலி – 6,265, திருப்பூர் – 1,089, திருச்சி – 4,939, வேலூர் – 7,056, விழுப்புரம் – 4,390, விருதுநகர் – 9,542, விமான நிலையத்தில் தனிமை – 853, உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை – 677, ரெயில் நிலையத்தில் தனிமை – 426, மொத்த எண்ணிக்கை – 2,85,024.