நாடு முழுவதும் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டு இருக்கிறார்.
முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.




