ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் பயனாளர்களை கவர்ந்து, முன்பதிவில் அசத்தி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார், இந்திய சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து தொடங்கிய அடியான் முன்பதிவின்படி, தற்சமயம் புதிய ஐ20 மாடல் கார் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது.
இந்திய மதிப்பில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடலின் தொடக்க விலை 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் மேக்னா, ஆஸ்டா, ஆஸ்டா (ஒ) மற்றும் ஸ்போர்ட்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களிலும் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்துடன் என்ஜினுக்கு ஏற்ற வகையில் மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில், புதிய தலைமுறை ஐ20 கார் இந்திய சந்தையில் கிடைக்கிறது.