புதியதாக ஐந்து என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடல் கார்களை உருவாக்கும் பணிகளில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
உலக அளவில் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், எலெக்ட்ரிக் கார்களுக்கான முன்னுரிமை அதிகரித்து வருகிறது. மோட்டார் நிறுவனங்களும், அதற்கு ஏற்றவாறு பல்வேறு புதிய மாடல்களில் எலெக்ட்ரிக் கார்களை புதுப்புது அம்சங்களுடன் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஐந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை,
அந்நிறுவனத்தின் புதிய எம்எம்ஏ பிளாட்பார்மில் உருவாக்கி வருவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. இது காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் வாகனங்களுக்கான பிரத்யேக பிளாட்பார்ம் ஆகும்.
பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய மாடல்கள் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக், பி கிளாஸ், சி கிளாஸ், சிஎல்ஏ மற்றும் ஏ கிளாஸ் செடான் மாடல்களுக்கு இணையானவை ஆகும்.
என்ட்ரி லெவல் மட்டுமின்றி பெரிய மாடல்களான இகியூஇ செடான், இகியூஇ எஸ்யுவி, இகியூஎஸ் செடான் மற்றும் இகியூஎஸ் எஸ்யுவி மாடல்களை இவிஏ பிளாட்பார்மில் உருவாக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.
அவை இ கிளாஸ், ஜிஎல்இ, எஸ் கிளாஸ் மற்றும் ஜிஎல்எஸ் மாடகளுக்கு இணையானவை ஆகும்.
புதிய எம்எம்ஏ பிளாட்பார்மின் தொழில்நுட்ப அம்சங்களை மெர்சிடிஸ் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது அதிக தூரம் செல்லும் திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.