ரெனால்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு, 80 ஆயிரம் ருபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதியில் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், ரெனால்ட் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்து உள்ளனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பான தள்ளுபடி அறிவிப்பில், ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ. 10 கூடுதல் சலுகையும், ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 43 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன வழங்கப்படுகிறது.
புதிய பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைபர் ஆகிய மாடல்களுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு 70 ஆயிரம் ருபாய் வரையயிலும், மற்ற வேரியண்ட்களுக்கு 60 ஆயிரம் ஆயிரம் வரையிலும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.