இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாறுதலுக்கு ஏற்ப, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் முறையை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியில் முறையே 10 மற்றும் 5 ரூபாய் குறைக்கப்பட்டது.
அந்த வகையில், இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.