நடிகர் சிம்புவுநடிகர் சிம்புவுக்கு அவரது ரசிகர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.க்கு அவரது ரசிகர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்புவுக்கு குட்டி ரசிகர் ஒருவர் அன்புடன் கொடுத்த முத்தமும், அவருடன் ஜாலியாக கொஞ்சி பேசிய வீடியோவும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொரோனா லாக்டவுனில் உடல் எடை குறைத்து மீண்டும் சினிமா ஷூட்டிங்கில் சிம்பு பரபரப்பாகி இருக்கிறார். மேலும் ‘ஈஸ்வரன்’ படத்தை ஒரு மாதத்தில் முடித்து கொடுத்து இருக்கிறார்.
மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ஆக்டிவ்வாக இருப்பதோடு மட்டுமில்லாமல், ஆன்மீகத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் சிம்பு. அந்த வகையில் சமீபத்தில் சாமி கும்பிடுவது போல ஒரு புகைப்படத்தை அவர் பகிர அது வைரல் ஆனது.
READ MORE- அனிதாவா ஆஜீத்தா…எவிக்ஷனில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?! #BiggbossEviction
‘ஈஸ்வரன்’ அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், ‘மாநாடு’ பட ஷுட்டிங்கிலும் அவர் தற்போது பிஸி. இந்த நிலையில்தான் அவர் தன்னுடைய குட்டி ரசிகர் ஒருவரை சந்தித்து இருக்கிறார்.
அந்த சுட்டி கொடுத்த கிஃப்ட்டும், அவர்கள் பேசி கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.