முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பாக #ShameonVijatSethupathi என்னும் ஹாஷ்டாக் நெட்டிசன்களால் வைரலாக்கப்படுகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இலங்கை அணிக்காக
டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தவர்.
இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார். இதில் முத்தையா முரளீதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 800 விக்கெட்களை வீழ்த்தியதால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.
இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.
இதில் முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் போட்டோ இறுதியில் வருகிறது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
முத்தையா முரளிதரன் வெளிப்படையாகவே இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு ஆதரவு தெரிவித்ததால் ஏற்கனவே பெரியார் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த திரைப்படத்தை எதிர்த்து வரும் நிலையில் தற்போது நெட்டிசன்களும் இந்த திரைப்படத்தை எதிர்த்து வருகின்றனர்.




