பிக்பாஸ் புகழ் ஜூலி தனக்கு திருமணம் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மெரினாவில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் மூலம் அவர் பிரபலம் ஆகி இருந்தாலும், அது அவருக்கு எதிரானதாகவே இருந்தது.பலரும் அவருக்கு எதிராகவே இணையத்தில் கருத்து பதிவிட்டு, வில்லியை போன்று சித்தரிக்க தொடங்கினர். சமூக வலைதளங்களில் பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என திரைபயணத்தில் பிஸி ஆகிவிட்டார். அவ்வப்பொது, சமூக வலைதளபக்கங்களில் அவர் ஏதேனும் கருத்து தெரிவித்தாலும், நெட்டிசன்கள் மொத்தமாக சேர்ந்து அவரை கிண்டலடித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியான செய்தி இணையத்தில் அதிகளவில் பகிரபட்டது. மேலும், குறிப்பிட்ட அந்த நபர் உடன் ஜூலி லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, இந்தச் செய்தி போலியானது என்று ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. எனக்கு திருமணம் என்று செய்தி வெளியாவது போலியனது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.