பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் குறித்து ஆரி, அனிதா, பாலா பேசி கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் சனம் எவிக்ஷன் குறித்து ஆரி, அனிதா, பாலா பேசி கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஆரி, ‘நல்லா விளையாடறவங்க எல்லாரும் வெளிய போய்ட்டா, அர்ச்சனா கேங் மட்டும் இருப்பாங்க. அவங்க பல இடங்கள்ள சேஃப் கேம் விளையாடறது, அவங்களுக்குள்ளயே நாமினேஷன் பண்ணிக்காதது இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும் போது அப்போ இன்னைக்கு சனம்க்கு நடந்த மாதிரிதான் நாளைக்கு நமக்கும் நடக்கும்’ என சொல்கிறார்.
READ ALSO- கேப்டன்சி டாஸ்க்கில் பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்! #BiggbossPromo1
இந்த ஒரு விஷயத்தை கேட்டு பாலாவும், ‘கண்டிப்பா வாய்ப்பிருக்கு. அப்போ, இந்த கேம்ல ஒரு சமநிலையே இருக்காது’ என சொல்கிறார். அனிதாவும் வெறுத்து போய், ‘என்ன கேம் இது, எதுக்கு விளையாடனும்’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.
இந்த கருத்துகள்தான் நேற்று மக்களின் கருத்தாகவும் சனம் வெளியேற்றத்தின் போது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.