கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த சந்திரமுகி படமானது பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகமானது தற்போது தயாராகி கொண்டு வருகிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடிக்கின்ற இந்த படத்தில் வடிவேலு லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ரவிமரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார் மேலும் வடிவேலுவின் நகைச்சுவை கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து படவேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.