கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன இதில் குறிப்பாக சினிமா துறை தொடர் படப்பிடிப்பு ரத்து காரணமாக பல்வேறு கலைஞர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர், மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டு வருகின்றது .
இதனால் விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் திரிஷ்யம் படத்துக்கு தனது சம்பளத்தில் 50 சதவீதம் குறைத்துள்ளார்.
இதே படத்தில் நடிக்கும் மீனாவும்
தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறார். நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் நிழல் படத்துக்கு சம்பளத்தை குறைத்து இருக்கிறார். தப்சியும் குறைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தனது சம்பளத்தை குறைத்துள்ளார்.
தற்போது தெலுங்கில் தயாராகும் புதிய படத்துக்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளம் கேட்டதாகவும், கொரோனா பாதிப்பினால் தயாரிப்பாளருக்கு உதவ ரூ.20 லட்சம் குறைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது