“குட்டி சேது ராமன்” வந்தாச்சு… சேதுராமன் மனைவி மகிழ்ச்சி…

“குட்டி சேது ராமன்” வந்தாச்சு… சேதுராமன் மனைவி மகிழ்ச்சி…
நடிகர் சந்தானத்தின் நண்பரான டாக்டர்.சேதுராமன் இவர் ஒரு தோல் நிபுணர் ஆவார் இவர் தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிபராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்

இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென அகால மரணமடைந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகவும் சிறுவயதில் (36 வயது) இறந்த சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், சஹானா என்கிற ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சேதுராமன் இறந்தபோது அவரது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. உமாவுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்தவர்கள் சேதுவே மகன் வடிவில் மீண்டும் பிறந்துள்ளதாகக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.  தனக்கு ‘குட்டி சேது வந்தாச்சு’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேதுராமனின் மனைவி , வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *