விஜய்யின் 65வது படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த பிரபலம் இணைகிறார்.
பொங்கல் சிறப்பு விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது விருந்தாக பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வந்தது.
கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யின் புதிய படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மற்றபடி படத்தை பற்றிய எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், விஜய்யின் 65வது படத்தில் நடன இயக்குனராக தான் கமிட்டாகி இருப்பதாக ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த Butta Bomma பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.