தமிழக திரை வட்டாரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார்கள்.மேலும் அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.’போர் தொழில்’ திரைப்படமானது கடந்த ஜூன் 9-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ‘போர் தொழில்’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இந்த ஒரு வேளையில் இந்த படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்இதற்கு தகுந்த ஒரு பதிலாக அசோக் செல்வன், “மச்சி.. அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்! நீயே பாத்துட்டு சொல்லு.. நன்றி டா, நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.