இக்கதை ஒரு நட்பின் அடையாளம். இருவரின் நட்பில் தொடங்கி நட்பின் பாசம், சோகம், காயங்கள் என அனைத்தையும் கடந்து ஒரு பெண்ணின் முழு அடையாளத்தை உணர்த்தும் கதை.
இக்கதையின் நாயகி சுஜிதா என்கிற ஒரு பெண். அவள் தன் உருவத்திலும் மற்றவர்களின் கண்பார்வைக்கு மட்டுமே பெண் .ஆனால் மன தைரியத்திலும், திறமையிலும் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்குவாள். அவள் மிகவும் அன்பானவள். எல்லோர் மனதிலும் சுலபமாக இடம் பிடிப்பாள். அவளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது மிகவும் பிடிக்கும் .அவளுக்கு கைப்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் ,அவள் அதற்கான பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டாள். பள்ளி பருவம் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒரு காலம் அதே போல் சுஜிதாவும் தன் ஒன்பதாம் வகுப்பினை படிக்க ஆரம்பிக்கிறாள் நாட்கள் பல நன்றாக சென்றது அவளின் பக்கத்து வகுப்பறையில் மாணவி ஒருத்தி இருக்கிறாள் ஆனால் அவள் சுஜிதாவிற்கு தோழி அல்ல. தோழியாக வேண்டும் என்பது அவளின் விருப்பம் சுஜிதாவினை அவளுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இதுவரை இருவரும் பேசிக் கொண்டது கிடையாது ஒருநாள் சுஜிதாவின் தோழிகள் இதுவரை காணாத அதிசயம் ஒன்றைக் கண்டு திகைத்து நின்றார்கள் காரணம் அன்று சுஜிதா நூலகத்திற்கு சென்று இருந்தால் சுஜிதா நூலகத்திற்கு வந்து பின்னர் புறப்படும் நேரத்தில் தன் தோழிகளிடம் நான் இதுவரை மழைக்குக் கூட நூலகம் பக்கம் ஒதுங்கியது கிடையாது என்னை எதற்கு இங்கு வரவழைத்தீர்கள் என்று புலம்புகிறாள் .அப்போது தன் ஆசிரியர் ஒருவர் சுஜிதா இங்கே வா, என்று அழைத்தார். அவளும் ஆசிரியரிடம் என்னவென்று கேட்டாள். நூலகத்திற்கு வந்து படித்துவிட்டு தன் புத்தகத்தை மாணவி ஒருவள் வைத்துவிட்டு சென்றுவிட்டாள். நீ யார் அந்த மாணவி என்று கேட்டு அவளிடம் நூலை கொடுத்து விடு என்று ஆசிரியர் கூறினார். சுஜிதா சரி என்று அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள். மறுநாள் காலையில் தனது பக்கத்து வகுப்பறைக்குள் சென்று எல்லோருக்கும் முன் நின்று இது யாருடைய புத்தகம்? என்று கோபத்துடன் கேட்கிறாள். ஒரு பெண் எழுந்து வருகிறாள் சுஜிதா அவளைப் பார்த்து ,உன்னுடைய பொருளை உனக்கு பத்திரமாக வைத்துக்கொள்ள தெரியாதா ?நீ எனக்கு ஒரு வேலை வைப்பாயா? என்று கேட்க எதிர்ப்புறத்தில் இருந்த பெண்ணிற்கு சிரிப்பு வந்துவிட்டது. மௌனமாக சிரித்தாள். சுஜிதா அதற்கு நான் உன்னை திட்டிக் கொண்டிருக்கிறேன். சிரித்துக் கொண்டிருக்கிறாய். சரியான லூசா இருப்பியா என்று கேட்டுவிட்டு தன் வகுப்பறைக்கு செல்கிறாள். புத்தகத்தை வாங்கிய பெண்ணிற்கு ஒரே சந்தோஷம் காரணம் சுஜிதாவிடம் பேச நினைத்த பெண் இவளே சுஜிதாவிடம் பேச வேண்டும் அவளுடன் தோழியாக வேண்டும் என்பது கவிதாவின் ஆசை இவள் தான் சுஜிதாவின் பக்கத்து வகுப்பறை மாணவி பின் இருவரும் பேசிக்கொண்டார்கள் தோழிகளாகவும் ஆனார்கள் நாட்கள் செல்ல செல்ல இருவரின் அன்பிற்கு அளவே இல்லாமல் போனது இருவரும் உயிர் தோழிகள் ஆனார்கள். நட்பின் ஆழம் விடுமுறை நாட்களை ஒன்றாக கழிப்பது என நன்றாக சென்றது .கவி பள்ளியின் விடுதியில் தங்கி படித்தால், அதனால் விடுமுறை நாட்களில் சுஜி கவிதாவை தன் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம் இப்படியே ஒரு வருடம் கழிந்தது…. ஒன்பதாம் வகுப்பு முடிந்தவுடன் கவிக்கு விடுதி சரிவரவில்லை என்று வேறு பள்ளியில் சேர்க்க அவள் வீட்டில் முடிவு செய்தார்கள். பின் பத்தாம் வகுப்பு படிப்பு வேறு பள்ளி வேறு தோழிகள் என அவள் ஒரு வருடத்தினை கழித்தால் ,சுஜிதா விற்கும் அப்படித்தான் சோகத்தில் ஒரு வருடம் போனதே தெரியவில்லை. பத்தாம் வகுப்பு முடிந்தது ,தேர்வு முடிவுகள் வெளியானது. பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு சுஜி கவியிடம் கேட்கிறாள் நீ மறுபடியும் என்னுடனே வந்து படி கவி என்று, கவி அதற்கு இல்லை நான் போன வருடம் தான் அந்த பள்ளியை விட்டு வந்தேன் .திரும்ப வர இயலாது நான் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டேன். என்று கூறினாள் .சுஜி சரி என்று கூறி அந்த விஷயத்தை மறந்தாள். பின் 11ஆம் வகுப்பு தனது முதல் நாள் பள்ளிக்கு செல்கிறாள். சுஜி தன் பள்ளியில் தோழிகளுடன் விடுமுறை நாட்களில் தான் சென்ற இடங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென்று யாரோ அவளின் கண்களை மூடுகிறார்கள். சுஜிதாவிற்கு யாரென்று சரியாக தெரியவில்லை ?பின் கண்களை திறந்து பார்க்கையில் அவள் முன் அவளின் தோழி கவி நிற்கிறாள். சுஜிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை ,ஒரே சந்தோஷம் !அதற்கு காரணம் கவி தேர்வு செய்தது சுஜியுடன் படித்த பள்ளியினை, பின் இருவரும் ஒன்றாக படித்துக் கொண்டிருந்தார்கள். இடையில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகளும், கோவங்களும், இருந்தது .அதன் பின் கவிதாவிற்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டது .சண்டை போட்ட நாட்களில் இருவரும் யார் முதலில் பேசுவது என்று யோசித்துக் கொண்டு காத்திருந்தனர் .பின் கவிதாவிற்கு மிகவும் உடல் முடியாமல் போய்விட்டது ,என்று கூறி சுஜியை மருத்துவமனைக்கு வரும்படி கூறி இருக்கிறார்கள். அவளும் மருத்துவமனைக்கு சென்று கவியினை பார்க்கும் பொழுது சுஜிதாவிடம் உனது தோழி கடவுளுக்கும், தோழியாக வேண்டும் என்று நினைத்ததால் இறைவனிடம் சென்றுவிட்டாள் என்று கூறி கவிதாவின் பெற்றோர்கள் கதறி அழுகிறார்கள். அதைக் கேட்டவுடன் சுஜிதா கதறி அழுகிறாள் தன் தோழி அவளுடன் இல்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .கவி இறந்த அன்று
மாலையே சுஜிதாவிற்கு மாநில அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற இருந்தது ஆனால் அவளுக்கு கவி நினைவுகள் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த மாநில அளவு போட்டியில் விளையாடி எப்படியாவது வெற்றி பெற்று உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சுஜியின் எதிர்கால ஆசையாக இருந்தது. ஆனால் அப்போது கவி ஞாபகங்கள் மட்டுமே அவளுக்கு இருந்தது. சுஜி கவியிடம் நீ எப்பொழுதும் என்னுடன் இருப்பாயா ?என்று கேட்டாள். கவி அதற்கு நீ உலக அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றால் ,நான் என்றும் உன்னுடன் இருப்பேன். என்று கூறி இருக்கிறாள் கவி அதற்கு சுஜி எப்படி உன்னால் என்னுடன் இருக்க முடியும் .என்று கேட்டதற்கு கவி, நீ மனதில் என்றும் நாம் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு விளையாடினால் கண்டிப்பாக வெற்றி பெறுவாய் .என்று கவி அவ்வப்போது கூறுவாளாம். நான் உருவமாக உன்னுடன் இல்லை என்றாலும் அதன் நினைவாக நீ வாங்குகின்ற பரிசு கோப்பையாக உன்னுடன் என்றும் நினைவில் இருப்பேன் என்று கூறுவாள். இப்படி கவி பேசிய வார்த்தைகள் எல்லாம் அவள் மனதை விட்டு நீங்காமல் வாட்டியது. பின் சுஜி எதைப் பற்றியும் நினைக்காமல் விளையாட்டு அரங்கத்திற்கு சென்று விட்டாள் காரணம் மாநில அளவில் நடைபெறுகின்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ,அடுத்த உலக அளவில் நடைபெறுகின்ற போட்டியில் கலந்து கொள்ள முடியுமென்று இருந்தாலும் ,கவி நினைவில் இருந்து மீண்டு வர அவளுக்கு நெடுநாள் ஆனது. அவள் நினைத்தபடியே மாநில அளவில் வெற்றியும் பெற்றால், பின் பள்ளி படிப்பினையும் முடித்தாள். அதன்பின் கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது .பல நாட்கள் கழிந்தன .ஒரு நாள் தனது உடற்கல்வி ஆசிரியர் உலக அளவில் விளையாட செல்வதற்கான முன் பதிவு சான்றிதழை எடுத்து வரும்படி கூறி இருக்கிறார். இவள் தன் பையில் இருந்து எடுக்கும் தருணம் திடீரென்று சான்றிதழை காணவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இனிமேல் தன்னால் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது .என்று தன் கவியின் புகைப்படமும் அழுகிறாள். கடைசி வரை சான்றிதழ் கிடைக்கவில்லை. சான்றிதழ் கிடைக்கவில்லை என்று ஆசிரியரிடம் தெரிவிக்கிறாள். ஒரு மாதம் கழிந்தது. தன் உடற்கல்வி ஆசிரியர் அவளை சென்னைக்கு அழைத்து செல்கிறார். ஆனால் அவளிடம் எதுவும், பேசிக்கொள்ளவில்லை. அங்கு சென்ற, மறுநாள் அவளை அவளது ஆசிரியர் மைதானத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சென்று சுஜி சுற்றி பார்க்கிறாள். அங்கு உலக அளவில் விளையாட போவதற்கான திறனாய்வுப் போட்டி, நடந்து கொண்டிருந்தது. அவளின் ஆசிரியர் அவளிடம் உனது திறமையினை இங்கு காட்டினால், உலகப் போட்டியில் நீ கலந்து கொள்ளலாம், என்று சொன்னார் .அப்போது அவளுக்கு நினைவில் வந்த ஒரே முகம் தன் தோழி கவி .அதே சமயம் தன் தோழி அவளுடன், இல்லையென்ற வலியும் ,வேதனையும் அவளுக்கு இருந்தது. வெறியுடன் தன் கைகளில் ,இருந்த பந்தினை எகிறி அடித்தால் ,அங்கு இருந்தவர்கள் திகைத்துப் பார்த்தார்கள். இதுவரை யாராலும் அடிக்க முடியாத தூரத்திற்கு அவள் பந்தினை அடித்துக் காட்டியிருக்கிறாள். என்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் .அவள் எகிறி அடித்த மறுநிமிடம் மயங்கி விழுந்தால் வாய் முழுக்க ரத்த வெள்ளம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பின் அவளுக்கு இன்பச் செய்தி காத்திருந்தது. அவள் அந்த போட்டியில் தேர்வானால் தன் பெயர் உலக அளவில் விளையாட செல்பவர்களின், பட்டியலில் வந்தது. ஐந்து மாதம் கழித்து போட்டி நடைபெற்றது. அவள் அதில் வெற்றியும் பெற்று அவள் தோழி கூறியபடி கோப்பையும் பரிசாக பெற்றாள் .அதனை தன் தோழியின் வார்த்தைகளின் நினைவாக தன்னுடன் வைத்துக் கொண்டாள். பின் சுஜிதாவின் ஆசிரியர் அவளை கூப்பிட்டு வாழ்த்துக்கள் கூறி அவளிடம் ஒரு சிறு கதையினை, சொல்கிறார் .ஒரு தேன் கூட்டின் உள்ள தேனீக்களை களைத்து மற்றவர்களால் அதில் உள்ள தேனினை, மட்டுமே எடுக்க முடியும். ஆனால் அந்தத் “தேன்கூடு “எவ்வாறு அந்த தேனீக்களால் கட்டப்பட்டது என்ற தேனியின் திறமையினை அவர்களால் கண்டறிய இயலாது .அது போல் மற்றவர்களால் உனது “சான்றிதழை “மட்டுமே திருட முடியும் .உன் “திறமையினை அல்ல” என்று கூறி விடை பெற்றார்..
“ஒருவரின் வெற்றிக்கு வழிகாட்டி நம்பிக்கை, இலக்கும் நான் காரணம்”.