பூரணி இங்க வாம்மா என்று வாசலில் கோலம் போட்டுகொண்டு இருந்த பூரணி அழைத்தார் சதாசிவம். இதோ வரேன் அப்பா என்று விரைந்து வந்தாள் பூரணி.
பூரணி அப்பா பலசரக்கு எடுக்க டவுனுக்கு போறேன், வர ராத்திரி ஆகும்.
நீ பள்ளியில் இருந்து வந்து பத்திரமா வீட்டில் இரு என்று புறப்பட்டார் சதாசிவம்.
சதாசிவம் பஸ் இருந்து இறங்கி கடைக்கு செல்லும் வழியில் இருவர் சதாசிவம் பணத்தை பறிக்க முயன்றனர்.
அப்போது அங்கு ஒரு பையன் வந்து தடுத்தான், அதில் அந்த பையனுக்கு அடி பட்ட்து. அந்த பக்கம் போலீஸ் வர இருவரும் பயந்து ஓடி விட்டனர்.
தம்பி எழுந்திரு அடி பலமா? என்றார் சதாசிவம்.
இல்லை பரவாயில்லை ஐயா என்றான். தம்பி உங்க பேர் என்ன என்றார் சதாசிவம்.
ஐயா என் பெயர் முரளி
என்றான்.
முரளி என்ன தம்பி படிக்கிறப்பா என்றார் சதாசிவம்.
ஐயா நான் படிக்க வில்லை, ஒரு டீ கடையில் எடு புடி வேலை பார்த்தேன் என்றான்.
சரி தம்பி சாப்டியா என்றார் சதாசிவம்.
கண் கலங்கி பார்த்தான் முரளி.
உடனே கடைக்கு அழைத்து சென்று உணவு வாங்கி தந்தார் சதாசிவம்.
சாப்பிடு தம்பி என்றவுடன் முரளி கண்ணில் கண்ணீர் வழிந்தது.
முரளி சாப்பிட்டவுடன் ரொம்ப நன்றி ஐயா மூணு நாளைக்கு பிறகு சாப்பிறேன் என்றான்.
ஏன் தம்பி உனக்கு யாரும் இல்லையா? என்றார் சதாசிவம்.
அதற்கு முரளி இல்ல ஐயா
நான் சிறு பிள்ளையாக இருந்த போதே அம்மா இறந்துட்டாங்க, அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டுங்க நான் சித்தப்பா வீட்ல இருந்தேன்.
அவர் என்னை டீ கடையில வேலைக்கு சேர்த்து விட்டார்.இப்ப டீ கடை ஐயா கடையை வித்துவிட்டார்.
எனக்கும் வேலை இல்லை என்றான் முரளி.
என்னோடு வர்றியா தம்பி என்றார் சதாசிவம்.
உடனே வருகிறேன் என்றான் முரளி. சதாசிவம் பொருள் களை வாங்கிட்டு முரளி-ம் அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு வந்தார் சதாசிவம்.
சதாசிவம் பூரணி இடம்
முரளியை பற்றி கூறினார்.
பூரணி முரளியை அண்ணா என அழைத்தாள்.
இரு நாட்கள் சென்ற பின்,
பூரணி முரளி இடம் தான் பிறந்து மூணு வருடங்களில்
தன் தாய் இறந்து விட்டார் என்றும் அப்பா தான் மறுமணம் செய்யாமல் தன்னை தனியாக வளர்த்து வருகிறார் என்றாள்.
நாட்கள் செல்ல செல்ல இருவரும் உடன் பிறந்தவர் போல அன்பான உறவினர்
ஆயினர்.
முரளி சதாசிவம் கடைக்கு செல்ல ஆரம்பித்தான். பூரணி சொல்லி கொடுத்து முரளி பாடம் கற்று கொண்டான்.
8 வருடம் சென்ற பின்,
முரளி கடையை நல்ல முறையில் நடத்தினான், பூரணி கல்லூரி படிப்பை முடித்தாள்.
பூரணிக்கு திருமணம் செய்ய முரளி ஏற்பாடு செய்தான்.
பூரணி முரளி க்கு தான் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்றாள்.
முரளிக்கு ராணி என்ற பெண் உடன் திருமணம் நடந்தது.
பூரணிக்கு மணி என்பவர் உடன் திருமணம் நடந்தது.
அனைவருக்கும் மகிழ்ச்சி.
பூரணி க்கு பெண் குழந்தை பிறந்தது.
3 மாதங்கள் கழித்து,
ஒரு நாள் பூரணி, மணி, மற்றும் சதாசிவம் மூவரும்
குழந்தை உடன் காரில் செல்லும் போது கார் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் குழந்தை மட்டும் உயிர் தப்பியது.
மணியின் அம்மா
குழந்தையை தானே
வளர்ப்பதாக சொல்லி சென்றார்.
ஆனால் உண்மையில் சதாசிவம் சொத்து களை
அடைய தான் குழந்தை
எடுத்து சென்றனர்.
உண்மை அறிய முரளி குழந்தையை தான் அழைத்து வந்தான்.
குழந்தை இல்லா ராணி
கடவுள் தந்த வரம் என்றாள்.