கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி தொடங்க இருக்கிறது.
எர்ணாகுளம் :
இந்தியாவில் தாய்ப்பால் வங்கி திட்டம் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை தாய்ப்பால் வங்கி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி தொடங்க இருக்கிறது.
இந்த தாய்ப்பால் வங்கியை கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வருகின்ற வெள்ளிக்கிழமை (பிப்.5) தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து ரோட்டரி கிளப்பை சேர்ந்த டாக்டர் பால் தெரிவிக்கையில், முதல் கட்டமாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டுமே பால் இலவசமாக வழங்கப்படும். பிற மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து பின்னர் திட்டமிடப்படும் என்று தெரிவித்தார்.
Read more – டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள் – நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து
மேலும், எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு சேகரிக்கப்படும் பாலை ஒரு குழந்தைக்கு வழங்குவதற்கு முன், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை சேகரித்து வைக்க முடியும் என்று தெரிவித்தார்.