போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த பணியாளர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டிற்க்கான போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் தரப்பட்ட 5 வயதுக்குட்பட்ட, 12 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரில் மருத்துவர் ஒருவர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.