டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கை இல்லாவிடில் வருகின்ற ஆகஸ்ட் 10க்குள் பாதிப்பின் எண்ணிக்கை 20லட்சத்தினை எட்டிவிடும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பில்இந்தியா 3 வது இடத்தில் இருக்கிறது. தற்போது தொற்றின் பாதிப்பு 10 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.ஆனால் இதன் பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு எந்தவித முயற்சியும் முறையாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றனர்.
மேலும் கொரோனா பரவத்தொடங்கிய காலத்திட்டத்தில் இருந்தே இந்தியா எந்தவித முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும்,இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பாதிப்பின் எண்ணிக்கை 20 லட்சத்தினை எட்டிவிடும் என மத்திய அரசிற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.