கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாத யாத்திரை 100 நாட்களை கடந்துள்ளது.
தலைநகர் டெல்லிக்கு பாரத் ஜோடோ யாத்திரை இன்று நுழைந்துள்ளது. டெல்லிக்கு வந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தியும் பங்கேற்றார். மாஸ்க் அணிந்தபடி சிறிது தூரம் தனது மகன் ராகுல் காந்தியுடன் நடைபயணமாக சோனியா காந்தி சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த பாத யாத்திரையில் பங்கேற்றார். இந்த நிலையில் எனது அம்மாவிடம் பெற்ற அன்பையே இந்த தேசத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தள்ளார்.