இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணர் பத்மாவதி (103) கொரோனா தொற்றால் காலமானார்.
பல மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று அரசியல் தலைவர்களையும், விளையாட்டு வீரர்களையும், திரை நட்சத்திரங்களையும், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் நம்மிடம் இருந்து பிரித்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் இதய நிபுணரான எஸ் ஐ பத்மாவதியும் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார்.
மருத்துவர் பத்மாவதியின் வாழ்க்கை குறிப்புகள்:
பத்மாவதி பர்மாவில் ஒரு வழக்குரைஞருக்கு மகளாக 1917 ஜூன் 17 அன்று பிறந்தார். யங்கோன் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்ற பின்பு சுவீடன் தெற்கு மருத்துவமனையில் இருதவியல் உயர் படிப்புகளை படித்தார். 1952 ஆம் ஆண்டில், இவர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்) சேர்ந்தார். அங்கு இவர் நவீன இருதயவியலில் முன்னோடியாக இருந்த டாக்டர் பால் டட்லி ஒயிட்டின் கீழ் படித்தார்.
1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். அங்கு இருதவியில் மருத்துவமனை ஒன்றை திறந்தார். 1954 ஆம் ஆண்டில் இவர் முதல் இந்திய பெண் இதயவில் நிபுணராக இருந்தார் . பின் இந்திய மருத்துவ கழகத்தின் ஒரு பரிசோதகராக இருந்த நிலையில் இந்தியாவின் முதல் இதயவியல் மருத்துவரானார்.
மருத்துவர் பத்மாவதிக்கு 1967 ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 1992 ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 1962 ம் ஆண்டு அகில இந்திய இதய அறக்கட்டளையை நிறுவினார். 1981 ம் ஆண்டு தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தை தொடங்கினார்.
மருத்துவர் பத்மாவதி தனது 103 வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.