உலகில் புதுமையான பொருளாதாரங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 50 வது இடத்தை பிடித்துள்ளது.
உலக அறிவு மற்றும் சொத்து சார் நிறுவனம் ஆண்டுதோறும் உலக புதுமை குறீயிடு ஒன்றை வழங்கி வருகிறது. உலக நாடுகளின் புதுமையான பொருளாதார நடவடிக்கைகள், சூழல்கள், விளைவுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசை படுத்துகிறது.
நாடுகளின் பொருளாதார பலம் மற்றும் பலவீனத்தை இந்த குறீயிடு அலசி ஆராய்கிறது. 2020 ஆம் ஆண்டிற்கான குறியிடு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் முதன் முறையாக இந்தியா 50 நாடுகளுக்குள் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. மத்திய மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தைப் இந்தியா பிடித்துள்ளது. மேலும் 2019-ல் இருந்ததை விட நான்கு இடங்கள் முன்னேறி இந்தியா உலகின் மூன்றாவது மிக புதுமையான குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரமாக மாறியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் அதன் சிறந்த வெளியீடுகள் காரணமாக நடுத்தர வருவாய் பொருளாதாரத்தில் இந்திய சிறந்த புதுமை தரம் கொண்டதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஸ்விசர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதை பின் தொடர்ந்து சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன. சீன நாடு 14 வது இடத்தில உள்ளது.