ஜம்மு காஷ்மிர் நிலவரைபடம் விவகாரம் குறித்து டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்றைய உலகம் ஒட்டுமொத்தமும் டுவிட்டரில் உள்ள நிலவரத்தைப் பார்த்து அன்றைய முக்கிய நிலவரங்களையும், உலகில் நிலவும் டிரெண்டிங் போக்கையும் அறிந்துகொள்ளும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனால் இதைப் பன்படுத்தி வரும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் பகுதியை சீனாவில் இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் காட்டப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்சிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அவமரியாதை ஏற்படுவதை ஏற்க முடியாது. டுவிட்டர் நிறுவனத்தின் செயல்பாட்டால் அதன் நடுநிலைத்தன்மை மற்றும் நேர்மை மீது கேள்வி எழுவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.