பெண் விமானிகளால் மட்டுமே இயக்கப்பட்ட உலகின் மிக நீளமான விமான பாதைகளில் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானம் வெற்றிகரமாக பெங்களூரில் தரையிறங்கியது.
பெங்களூர்:
உலகின் மிக நீளமான விமான பாதைகளில் ஒன்றான சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானத்தை முழுவதும் பெண்விமானிகளே இயக்கி வந்துள்ளனர். சுமார் 16 ஆயிரம் கிமீ தூரம் கொண்ட இந்த மிக சவாலான பாதையாய் கடக்க பனிப் படர்ந்த வடதுருவத்தின் வழியாக 27 மணிநேரம் பயணம் செய்து இந்திய விமான வரலாற்றில் புது சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா விமானம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் குழு கடந்த 9 ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு விமானம் வந்தடைந்தது.
Read more – ஹரியானாவிலும் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக்காய்ச்சல் : 4 லட்சம் பறவைகள் உயிரிழப்பு
இந்த விமானத்தை இயக்கிய கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரை பெங்களூர் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.