புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் அறிவும்,திறனும் உயரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
புதிய கல்வி கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றுவருகிறது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில ஆளுநர்கள், கல்வி அமைச்சர்கள் , மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. கல்வி கொள்கையில் அரசின் பங்களிப்பு முக்கியம் . மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வியில் பங்குண்டு.
புதிய கல்வி கொள்கையை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்வி கொள்கையாக பார்க்கின்றனர் எனவே கொள்கையில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.
கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் அறிவும்,திறனும் உயரும் இவ்வாறு அவர் கூறினார்.