வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை மட்டும் என்ன நடந்தாலும் ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 24 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், மத்திய பிரதேச விவசாயிகளுடன் புதிய வேளாண் மசோதா சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்,அப்பொழுது அவர்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காவே கொண்டுவந்துள்ளது.மேலும் இந்த வேளாண் சட்டங்களின் சீர்திருத்தங்களை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சி,7 மாதங்களுக்கு பிறகு இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Read more-இன்றைய ராசிபலன் 19.12.2020!!!
அதனைத்தொடர்ந்து,வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரவிவருவதை நிறுத்தி கொள்ளவேண்டும்,என்ன நடந்தாலும் வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை மட்டும் ரத்து செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.