மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் உயர்வுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
கடந்த பிப்ரவரி 1 ம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்குதல் செய்த சிறிது நேரத்திலேயே இந்திய பங்கு சந்தையில் ஏறுமுகம் கண்டது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் தாக்குதல் குறித்து பலரும் இது முழுக்க முழுக்க கார்ப்ரேட்டிற்கு ஆதரவான பட்ஜெட் என்று குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்தநிலையில், பெட்ரோல், டீசல் உயர்வுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாயாக இருக்கிறது.
Read more – கேரளாவில் முதல் தாய்ப்பால் வங்கி : நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது
ஆனால், சீதா பிறந்த நேபாளத்தில் பெட்ரோலின் விலை 53 ரூபாயாக மட்டுமே இருக்கிறது என்றார். மேலும் சீதையை சிறைவைத்த ராவணனின் சொந்த ஊரான இலங்கையில் 51 ரூபாய் மட்டுமே என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்திற்கு பாஜகவினரே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.