TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இன்று அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு TET தேர்வு எழுதிய ஆசிரியர்களின் அதில் தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் மட்டும் சான்றிதழ் செல்லும் என்று அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமோ படித்த ஆசிரியர்கள் என அனைவரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், அரசு TET தேர்வு எழுதிய ஆசிரியர்களின் அதில் தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் மட்டும் சான்றிதழ் செல்லும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனி ஒருமுறை மட்டுமே தேர்ச்சி பெற்றால் TET தேர்வு எழுதிய ஆசிரியர்களின் தகுதி மற்றும் அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே தேர்ச்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பது குறித்து சட்ட ஆலோசனை நடத்திப் பின் முடிவெடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெட் தேர்வில் தேச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.