ஹைதராபாத்தில் பணம் ஆசைக்காட்டி 18 பெண்களை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் :
ஹைதராபாத்தை சேர்ந்த 45 வயதான ஒரு நபர், 21 வயதில் தனக்கு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதன் காரணமாக அந்த நபருக்கு பெண்களின் மீது அதிக அளவு வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் தனியாக இருக்கும் பெண்களை பணம் ஆசைக்காட்டி கடத்தியுள்ளார்.
Read more – கேரள எல்லையில் தீப்பற்றி எரிந்த கிணற்று நீர் : அதிர்ந்த வீட்டின் உரிமையாளர்
இவ்வாறு கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார். சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று(செவ்வாய் கிழமை) அந்த நபர் கைது செய்யப்பட்டார்.அப்பொழுது அந்த நபரை வழக்குபதிவு செய்து விசாரித்தபோது இதுவரை 18 கொலை உள்பட 21 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.