உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர்,குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி பண்டிகை நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் அனைவரும் செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில்:
தீபாவளி என்பது தூய்மையின் பண்டிகையாகும், எனவே மாசு இல்லாத, சுற்றுச்சூழலுடன் இணைந்த தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கை அன்னையை போற்றுவோம்.“இந்த புனிதமான நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மற்றும் ஒளியின் இந்த மகத்தான திருவிழா நம் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.