விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்னா:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 19 வது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசுக்கு இந்த போராட்டத்தினை தீவிர படுத்தும் வகையில் அதன் ஒரு பகுதியாக விவசாய அமைப்பினர்களின் தலைவர்கள் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி,மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.
Read more – கல்வி தொழில்நுட்பத்தில் அசத்த வருகிறது E-STUDYROOM :ஆன்லைன் கல்வியில் புதியதோர் ஒரு பயணம்
இந்த தொடர் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.நேற்று பீகார் மாநிலத்தில் வேளாண் மசோதா சட்டங்களின் நன்மைகளை பற்றி விளக்க பா.ஜ.க சார்பில் விவசாய கூட்டத்தில்
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்து பேசியதாவது:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.அவர்களை மோடி அரசு மதிக்கிறது.ஆனால்,விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்,டெல்லி மற்றும் மராட்டியத்தில் கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் சிலரை விடுதலை செய்யுமாறு இந்த போராட்டத்தில் கூறப்பட்டு வருகிறது,அவர்களைஇந்த மோடி அரசு வெற்றிபெற விடாது என்று தெரிவித்துள்ளார்.