ஆவின் தயிர் , நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பால் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தி ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி,
ஆவின் தயிர் 100 கிராம் – ₹10 -₹12,
ஆவின் நெய் 1 லிட்டர் – ₹535 – ₹580
ஆவின் நெய் 15 கிலோ டின் – ₹8680 – ₹9680
ஆவின் நெய் 15 மில்லி – ₹10 – ₹12,
ஆவின் 1 கிலோ பிரீமியம் தயிர் – ₹100 – ₹120,
ஆவின் மேங்கோ லெஸ்ஸி – ₹23 – ₹25 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இதை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கடந்த 2019ம் ஆண்டு முதல் பலமுறை பால் பொருட்களின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்ட நிலையிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. எனவே, இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.