வாரணாசியில் நடைபெற்று வரும் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் மாண்புமிகு ஆளுநர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் அழைப்பின் பேரில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் இன்று (25/11/2022) கலந்துகொண்டார்கள்.
மேலும் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்ட இன்றைய நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்று உரையாற்றினார்கள்.