லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் உலகெங்கும் ஜூலை 28ம் தேதி வெளியாகிறது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா திரைப்படமாக இப்படத்தை தயாரித்துள்ளனர்.ஜேடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி கலந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சின்னக் கலைவாணர் விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமின்றி இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்தலா ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பாடலாசிரியர்கள்: வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர். மாபெரும் திரை ஆளுமைகளை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.