நேற்று ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி – தொடர்ந்து அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையால் சற்று ஆறுதல் – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பது மத்திய சுகாதார அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை 27,176 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவை நேற்றைய பாதிப்பை விட இன்று 1,772 பேர் வரை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பை விட சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் சிகிச்சையில் இருந்த 38,012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இவர்களோடு சேர்த்து இதுவரை மொத்தமாக 3,25,22,171 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதேபோல், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 284 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,497ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் பதிவான மொத்த பாதிப்பான 27,176 பேரில் 15,876 பேர் கேரளா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது தினசரி மொத்த பாதிப்பில் 54% பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 61,15,690 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை, 75,89,12,277டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.