யூடியூப் , ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பதிவிடும் வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலங்களாக யூடியூப் , ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பதிவிடும் வீடியோக்களால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகிறது. அதிலும் குறிப்பாக கந்தசஷ்டி கவசம், வனிதா திருமணம் பற்றிய வீடியோக்கள் எல்லாம் பூதாகரமாக வெடித்துவருகிறது. மேலும் இதுக்குறித்து பல்வேறு எதிர்ப்புகளும் எழும்பி வருகிறது.
எனவே இனிவரும் காலங்களில் சமூகவலைத்தளங்களில வீடியோக்கள் பதிவிடுவதை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவில் சமூக வலைத்தளங்களில் குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுவதாகவும் மனுவில் குற்றச்சாட்டுயுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.