குடும்பம், குழந்தைகளுடன் இணக்கமாக வாழ பயிற்சி செய்வது கடினம் : இந்த வகை நாய்களை வாங்க வேண்டாம்
சிஹுவாஹுவா (Chihuahua):
பார்க்க சிறிதாகத் தோற்றமளித்தாலும், பிடிவாத குணம் இருப்பதால் பயிற்சி அளிப்பது கடினம். குழந்தைகளிடம் சிறிது முரட்டுத்தனத்திற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அலாஸ்க்கன் மாலமுட் (Alaskan Malamute):
இவை உள்ளார்ந்த தலைவர்கள். தனது ஆதிக்கத்தை நிரூபிக்க சிறிய நாய்கள், குழந்தைகளை தாக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த வகை நாய்களை பயிற்சி செய்யவது கடினம்.
ராட்வீலர் (Rottweiler):
இந்த வகை நாய்கள் முதலில் வண்டி இழுக்கவும், மேய்க்கவும் பயன்படுத்தப்பட்டதால் மிகவும் வலு மிகுந்தவை. தீவிர விசுவாசம் கொண்டவை என்பதால் வெளியாரிடம் முரட்டுத்தனம் காண முடியும். நல்ல பயிற்சி அளிப்பது அவசியமாகிறது.
புல்மாஸ்டிப் (Bullmastiff)
இவை அளவில் பெரிதாக சற்று முரட்டுத்தனமான வகையைச் சார்ந்தவை. தன் அளவு பெரிது என்று உணராததால், பிள்ளைகளை தன்னை அறியாமல் தள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது.
வெய்மறனர் (Weimaraner)
வேட்டையாடும் வகை நாய்கள் என்பதால் குழந்தைகள், சிறிய உயிரினங்களை காயப்படுத்தும் வாய்ப்புள்ளது