தாய்லாந்தில், கால்நடை மருத்துவர் ஒருவர் வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது யானை ஒன்று பிளிறும் சத்தம் அவருக்கு கேட்டுள்ளது. அவர் கால் நடை மருத்துவர் என்பதால், அந்த யானையின் சத்தத்தை வைத்து அது என்ன தெரிவிக்க முயல்கிறது என்பதை அறிந்துகொண்டுள்ளார்.
நடந்தது என்னவென்றால், 12 ஆண்டுகளுக்கு முன் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த Plai Thang(31) என்ற அந்த யானையைக் கண்டுபிடித்து அதை மருத்துவரிடம் கொண்டுவந்துள்ளார்கள்.
Pattarapol Maneeon என்ற அந்த மருத்துவர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
பல மாதங்கள் சிகிச்சைக்குப் பின் Plai மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் வேலை காரணமாக சென்றுகொண்டிருந்திருக்கிறார் Maneeon.
அவரைத் தொலைவில் கண்ட Plai, மிகச்சரியாக அவரை அடையாளம் கண்டுகொண்டுள்ளது. அது அவரை அழைப்பதற்காக பிளிற, அதை புரிந்துகொண்ட Maneeon அதனிடம் செல்ல, Plai அவருக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக அவரை நோக்கி தன் துதிக்கையை நீட்டியிருக்கிறது.
உடனே, Maneeonம் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அதன் துதிக்கையை கை நீட்டி தொட்டிருக்கிறார்.
இப்படி காட்டு யானை ஒன்று மனிதனுடன் அன்பை பகிர்ந்துகொண்ட ஒரு ஆச்சரிய சம்பவம் நிகழ்வது, கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதல்முறை என கருதப்படுகிறது.