ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக பரவி கொண்டு உச்சம் தொடும் நிலைமையில் உள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
இதனை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து தள்ளுபடி செய்யும்படி நாட்டின் முக்கிய துறைமுகங்களில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின் மருத்துவம் சார்ந்த உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு துறைமுகத்தில் முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று துறைமுக பொறுப்பு கழகங்களுக்கு துறைமுகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பின் ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை கப்பலிலிருந்து தாமதமின்றி உடனடியாக இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
துறைமுகத்திலிருந்து அவற்றை விரைவாக வெளியே அனுப்புவதற்கு துறையுடன் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற துறைமுக பொறுப்பு கழக தலைவர்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் ஏற்றி வரும் கப்பல்களில் மற்ற சரக்குகளுடன் ஏற்றி வந்தால் அதற்கு ஏற்ப கட்டணம் தள்ளுபடி வழங்கப்படவேண்டும் என்று துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை ஆக்சிஜன் கப்பல்களுக்கான கட்டண தள்ளுபடி உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.