தமிழகத்தில் பிரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு படுத்த குழந்தைகள் காலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர், இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் சந்தோஷ் அருகிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது குழந்தைகளுக்கு பிரைட் ரைஸ் கொண்டு வருவது வழக்கம் என்பதாக கூறப்படுகின்றது. இதேபோன்று சம்பவ தினந்தோறும்பிரைட் ரைஸ் கொண்டு வந்ததுடன், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி சாப்பாடு ஊட்டி விட்டு உறங்க வைத்துள்ளார்.
மேலும் மறுநாள் காலையில் எழுந்த போது, குழந்தைகள் அசைவற்று கிடந்துள்ளனர்,இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கே அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு பிரைட் ரைஸ் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.