பிஎப் கணக்குதாரர்களுக்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் ₹7 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பிஎப் வைத்திருப்போருக்கு வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் ₹7லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கி வருகிறது. இந்த இன்சூரன்ஸ் வசதிக்காக, எந்த ஒரு கூடுதல் கட்டணமோ, பிரீமிய தொகையோ செலுத்த தேவையில்லை.
அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்குமே இந்த இன்சூரன்ஸ் கிடைக்கிறது.பிஎப் கணக்குதாரர் நோய்வாய்பட்டு இறந்தாலோ, இயற்கையாக மரணம் அடைந்தாலோ அல்லது விபத்தில் இறந்தாலோ அவரது நாமினிக்கு ₹7லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
சம்மந்தப்பட்ட பிஎப் கணக்குதாரருக்கு நாமினிகளே இல்லை எனில், அவரது கணவர்/மனைவி, திருமணமாகாத மகள்கள், வயது வராத மகன்கள் ஆகியோருக்கும் இன்சூரன்ஸ் பலன் கிடைக்கும். மேலும், இதுபற்றி அறிந்துகொள்ள அருகில் உள்ள பிஎப் அலுவலகத்தை அணுகவும்.
விவரங்களுக்கு: https://epfindia.gov.in/site_en/index.php
-பா.ஈ.பரசுராமன்.